Friday, September 03, 2010 2:10 PM IST
Click
முக்கியச் செய்திகள்
பிகார் இடைத் தேர்தல்: 42% வாக்குப்பதிவு

First Published : 16 Sep 2009 11:24:00 PM IST


பாட்னா, செப். 15: பிகாரில் இரண்டாம் கட்டமாக 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத் தேர்தலில் 42 சதவீத வாக்குகள் பதிவாகின.

  இத் தகவலை மாநில துணை தலைமைத் தேர்தல் அதிகாரி குமார் அன்சுமாலி தெரிவித்தார்.

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6 வாக்குச் சாவடிகளில் தேர்தல் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக புகார் ஏதும் இல்லை என்றார் அவர்.

  வன்முறை இல்லாமல் வாக்குப்பதிவு முழு அமைதியாக நடந்தது என்று தலைமை நிலைய கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் நீல்மணி கூறினார்.

  வாக்குப்பதிவு நடைபெற்ற 2620 வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

  வாக்குப் பதிவு நடைபெற்ற 11 தொகுதிகளில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் 7 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளம் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் தனித்து 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்